பல்சுவை முத்து :
உலக மெலாம் பருவ மழை
ஒத்தபடி பெய்யட்டும்;
உழவரெலாம் தானியத்தை
உவப்புடனே பெருக்கட்டும்;
பலதொழில்கள் புரிகின்ற
பாட்டாளி உயரட்டும்;
பகுத்துணர்வில் தொகுத்துணர்வு
பண்பாட்டை உயர்த்தட்டும்;
கலகங்கள் போட்டி, பகை
கடந்தாட்சி நடக்கட்டும்;
கல்லாமை, கடன், வறுமை,
களங்கள் மறையட்டும்;
நலவாழ்வை அளிக்கும்
மெய்ஞான ஒளி வீசட்டும்;
நம் கடமை அறவாழ்வின்
நாட்டத்தே சிறக்கட்டும்!
– வேதாத்திரி மகரிஷி