மேத்யூ ஹைடன் கணிப்பு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது. இதற்காக இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளன.
ஐபிஎல் முடிந்து சிறிது கால இடைவெளியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்க உள்ளதால் இந்திய அணி இந்தப் போட்டியை எப்படி எதிர்கொள்ளும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசியுள்ள அவர், இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்காது என்றும் அதேபோல் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் அதிகமாக கை கொடுக்காது என்றும் கூறியுள்ள அவர், இதனால் இந்திய அணி வெற்றிபெற அதிகம் வாய்ப்பிருப்பதாகக் கூறியுள்ளார்.