பெற்றோரைப் பேணிப் பாதுகாப்போம்!

இன்று நீங்க என்னவாக இருக்கிறீர்களோ, என்ன படிக்கிறீர்கள், என்ன பணி செய்கிறீர்கள், என்னவாக உங்களை உண்கிறீர்கள் இப்படி இந்த சமூகத்தில் நீங்க எந்த நிலையில் இருக்கிறீர்களோ, அதற்கு யார் எல்லாம் காரணம் என்று எண்ணிப்பார்த்தால் இந்த இருவரின் பங்கு அளப்பரியது.

அது தான் நம் தாய் தந்தை. பெரும்பாலானோரின் வளர்ச்சிகளுக்கு முதலில் விதையிட்டது அவர்களது பெற்றோர்களாகத்தான் இருப்பார்கள்.

அந்த வகையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த சமூகத்தின் நல்வாழ்விலும், உயர்விலும் மிக முக்கிய பங்கு வகுக்கின்றனர்.

புதிதாக இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தேவையான பாதுகாப்பு, கல்வி, உடல்நலம் போன்றவற்றை தங்கள் வாழ்வின் முக்கிய கடமையாகவும் முதன்மையான கடமையாகவும் பாவிக்கின்றனர்.

ஒரு குழந்தை பிறந்த நிமிடத்தில் இருந்து பெற்றோர்கள் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு தருணங்களையும் அந்த குழந்தைகளை முன் வைத்தே நகர்த்துகின்றனர்.

இப்படி தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிக்கும் பெற்றோர்களின் தியாகத்தை அங்கீகரிக்கவே ஆண்டு தோறும் ஜூன் மாதம் முதல் நாள் உலக பெற்றோர் தினம் முன்னெடுக்கப்படுகிறது.

உலக பெற்றோர் தினம் உருவான கதை

1983 ஆம் ஆண்டு பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான ஆணையம் ஆகியவை குடும்பம் தொடர்பான பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்க ஐ.நா பொதுச்செயலாளரிடம் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து உலகப் பெற்றோர் தினம் தொடங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, 1989 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 1994 ஆம் ஆண்டை சர்வதேச குடும்ப ஆண்டாக அறிவித்தது. அது குடும்பங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியது.

இதைத்தொடர்நது இறுதியாக, 2012 ஆம் ஆண்டில், பொதுச் சபையின் பிரகடனத்தின் மூலம் ஜூன் 1 அதிகாரப்பூர்வமாக பெற்றோரின் உலகளாவிய தினமாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து 2013ஆம் ஆண்டு முதல் உலகப் பெற்றோர் தினம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டது. இந்த வகையில் உலகம் முழுவதும் இன்று சர்வதேச பெற்றோர் தினம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த நாளில் பெற்றோரின் அன்பையும் அங்கீகரிக்கவும், அவர்களுக்கு மரியாதை செலுத்துவதன் அத்தியாவசியத்தையும் முடிந்த வரை முன்னெடுப்போம்.

  • நன்றி : இந்துஸ்தான் டைம்ஸ் 
Comments (0)
Add Comment