நடிகர் சித்தார்த் பேட்டி
பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில், கார்த்திக் ஜி கிரிஷ் எழுத்து இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள ‘டக்கர்’ படம் ஜூன் 9 அன்று தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெளியாகிறது. சென்னையில் இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது.
இதில் கலந்து கொண்ட நடிகர் சித்தார்த் பேசியதாவது, “டக்கர்’ பட இயக்குநர் கார்த்திக் இந்தப் படத்திற்காக என்னை சந்தித்தபோது, சில விஷயங்கள் எனக்கு ஹைலைட்டாக தோன்றியது.
எந்த இடத்திலும் நிற்காத ஸ்பீடான ஒரு படம் இது. ’டக்கர்’ என இந்தப் படத்தின் தலைப்பின் அர்த்தம் மாறிக் கொண்டே இருக்கும்.
வட இந்தியாவில் ‘டக்கர்’ என்றால் போட்டி, சில ஊர்களில் ஸ்மார்ட்டாக இருப்பதை ‘டக்கர்’ என சொல்வார்கள். மோதல், சூப்பர் என பல அர்த்தம் உண்டு.
இந்தப் படத்தில் ‘டக்கர்’ பயன்படுத்தியதன் காரணம், மோதல். ஒரு பொண்ணுக்கும் ஹீரோவுக்குமான க்ளாஷ்தான் அது.
சமீபகாலத்தில், சினிமாவில் வந்த கதாநாயகிகள் கதாபாத்திர வடிவமைப்பில் இது வித்தியாசமாக எனக்கு பட்டது.
’குஷி’ போல லவ்வர்ஸ்க்குள் வரும் பிரச்சினையா என்று கேட்டால் இல்லை. பணக்காரன் ஆக வேண்டும். ஆனால், அது முடியவில்லை எனும்போது இளைஞர்களுக்கு வரும் கோபம்தான் இவனுக்கும்.
ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறேன் என என்னை நானே பாராட்டும் அளவுக்கு நன்றாக செய்திருக்கிறேன்.
இந்தப் படம் முழுக்க முழுக்க கமர்ஷியல் படம்தான். ஜூன் 9 அன்று இந்தப் படம் ஹிட் என்று சொல்லும் அளவுக்கு இதன் மீது நம்பிக்கை உள்ளது.
இந்த சம்மரில் வெளியாகும் படங்களில் ‘டக்கர்’ நிச்சயம் தனி இடத்தைப் பிடிக்கும். ஆகஸ்ட் மாதம் வந்தால் ‘பாய்ஸ்’ படம் வெளியாகி 20 வருடங்கள் ஆகிறது. இந்த 20 வருடத்தில் நிறைய நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
அடுத்த இரண்டு வருடங்களில் நல்ல படங்களில் கமிட் ஆகியுள்ளேன். உங்கள் அனைவரது ஆதரவுடனும் ‘டக்கர்’ நிச்சயம் வெற்றி பெறும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்” என்றார்.