ஒரு புத்தகம் என்ன செய்யும்…?

1. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நமக்கு அதுவரை தெரியாத விவரங்கள் தெரியவரும்.

2. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய பொதுப்புத்தியில் அதுவரை  தெரிந்த தகவல்கள், உண்மைகள், விழுமியங்கள், அனைத்தைப் பற்றியும்  வினாக்கள் உருவாகும்.

3. ஒருபுத்தகத்தை வாசிக்கும்போது நமது அறிவுப் பரப்பு ஒரு மில்லி மீட்டராவது விசாலமாகும்.

4. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்மடைய உணர்வுகள் கூர்மையடையும்.

5. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நாம் அதுவரை நம்பியிருந்த உண்மைகள் பொய்களாக மாறும்.

6. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய வீடு, ஊர், மாவட்டம், மாநிலம், நாடு, இனம், மதம், ஜாதி, மொழி, இவையாவும் மறைந்து போகும். பேரண்ட மனிதனாக உணரமுடியும்.

7. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது உலகின் எந்த மொழிபேசும் மனிதர்களின் வாழ்வை அவர்களுடைய பண்பாட்டை பழக்க வழக்கங்களை, அந்த மொழி தெரியாமலேயே புரிந்துகொள்ள முடியும்.

8. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய மூடநம்பிக்கைகள் ஒழிந்து அறிவியல் பார்வை உருவாகும்.

9. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது சனாதனத்துக்கும் மரபுக்கும் நவீனத்துக்கும் உள்ள வேறுபாடுகள் தெரியும்.

10. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது வரலாற்றுக்கும் புராண இதிகாசங்களுக்கும் உள்ள வித்தியாசம் புரியும்.

11. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நாம் வாழும் சமூகத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என்ற ஆவல் ஏற்படும்.

12. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது காக்கை, குருவி, கடல், மலை என்று இயற்கையை ஆராதிக்கத் தோன்றும்.

13. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது காதலின் ஊற்றுக்கண் பொங்கி பிரவிகிக்கும்.

14. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது ஜாதி, மதத்தின் பின்னுள்ள சதிவலையைப் புரிந்து கொள்ள முடியும்.

15. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது இந்த உலகத்தின் மீது விரிந்துள்ள ஏகாதிபத்தியத்தின் சதி வலையைத் தெரிந்து கொள்ள முடியும்.

16. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது பார்க்கிற அத்தனை ஜீவராசிகள் மீதும் அன்பு கொள்ளத் தோன்றும்.

7. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது சமத்துவமற்ற, ஏற்றதாழ்வுகளுள்ள இந்த சமூகத்தின்மீது கோபம் பொங்கும்.

B. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது மனிதனை மனிதன் சுரண்டும் அமைப்பினை மாற்றத் தோன்றும்.

19. புத்தகம் மனிதகுலத்தின் அறிவுச் சொத்து. 

– நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment