அண்மையில் தான் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தி.மு.க அரசுக்கு எதிரான புகார்களைப் பட்டியலிட்டு – அதை முதல் ‘பார்ட்’ என்றும் சினிமா பாணியில் பேசி ஊடகங்களைக் கலகலப்பாக்கி இருந்தார்.
பதிலுக்கு தி.மு.க.வும் அவர் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறது.
இந்த நிலையில் புதுச்சேரி முன்னாள் முதல்வரான நாராயணசாமி புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பற்றிய பரபரப்பான குற்றச்சாட்டைக் கூறியிருக்கிறார்.
”விரைவில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மீதான ஊழல் புகாரை வெளியிடுவேன்’’
ஊடகங்களில் இதுவும் ஒரு முக்கியச் செய்தியாக மாறியிருக்கிறது.
பா.ஜ.க தரப்பினர் தான் பல மாநிலங்களில் ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுக்குவதில் முன்னணியில் இருக்கிறபோது, ஒரு மாநில ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் தரப்பில் ஊழல் புகாரை வெளியிடுவதாகச் சொல்லியிருப்பது பரபரப்பாகி இருக்கிறது.
அண்ணாமலை சொன்னார். முதற்கட்டமாகச் செய்திருக்கிறார்.
நாராயாணசாமி இப்போது சொல்லியிருக்கிறார். பாரக்கலாம்.
– யூகி