நடிகர் நாசரின் தம்பி ஜவஹர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்து உள்ளார்.
1980-களில் K. பாலசந்தரின் கல்யாண அகதிகள் படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் நாசர்.
நாயகன் படம் மூலம் மிக பெரிய நடிகராக அவதாரம் எடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து இன்று வரை திரை உலகில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.
நாசருக்கு 3 தம்பிகள் அதில் ஜவஹர் ஒருவர். இவர் 1990 களில் ஒளிப்பதிவாளர் அப்துல் ரஹ்மானிடம் இதயம், கிழக்கு வாசல், சிங்காரவேலன் போன்ற படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.
தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் வெளிநாட்டில் பணிப் புரிந்ததோடு சொந்தமாக வியாபாரமும் செய்து வந்துள்ளார்.
சில வருடங்கள் முன்பு சென்னை திரும்பியவர் பட வாய்ப்புகளை தேடி தீவீரமாக அலைந்துள்ளார்.
அப்போது கிடைத்த வாய்ப்புகள் தான் ஜிவி 2, பனிவிழும் மலர்வனம் போன்ற படங்கள்.
தற்போது இளையத் தளபதி விஜய் நடித்து வரும் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க லோகேஷ் கனகராஜ் வாய்ப்பு அளித்ததை எண்ணி மிக மகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.
நான் என்ன கதாபாத்திரம் பன்னேன்னு சொல்ல கூடாது. இப்படத்துக்காக காஷ்மீரில் 40 நாட்கள் சென்று வந்து உள்ளேன்.
எனது பங்களிப்பு 15 நாட்கள் பட மாக்கப்பட்டது என் மகிழ்ச்சி பொங்க கூறினார்.
அண்ணன் நாசர் ஆரம்பகால கட்டங்களில் படங்களில் வில்லனாக நடித்து வந்தார் நீங்க எப்படி என கேட்ட போது அப்படி எல்லாம் ஏதும் கிடையாது.
கிடைக்கும் அனைத்து பாத்திரங்களையும் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
தற்போது செங்கல்பட்டு அருகே பாலூரில் மிக அழகான வீடு ஒன்று கட்டி வருவதையும் தெரிவித்தார்.