திடீரென திறந்த விமானத்தின் அவசரக்காலக் கதவு!

மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பயணிகள்

தென்கொரியாவில், ஏசியானா ஏர்லைன்ஸ் என்ற பிரபலமான விமானப் போக்குவரத்து சேவை நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தின் ஏர்பஸ் விமானம் ஒன்று, ஜேஜு என்ற தீவில் இருந்து புறப்பட்டு டேகு சர்வதேச விமான நிலையத்தை நோக்கிச் சென்றது.

இந்த விமானத்தில் 194 பயணிகள் இருந்துள்ளனர்.

விமானம் டேகு சர்வதேச விமான நிலையத்தை நெருங்கிய நிலையில், தரையிறங்க ஆயத்தமானது.

விமானம் தரையிறங்கும் தருவாயில் அதில் இருந்த 30 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர், திடீரென அவரசகால கதவைத் திறந்துவிட்டார்.

இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திடீரென நடுவானில் கதவு திறக்கப்பட்டதால், பயணிகள் அனைவரும் அலறத் தொடங்கினர். இதன் காரணமாக, 6 பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இருப்பினும் சில நிமிடங்களில் விமானம் திறந்த கதவுகளுடனேயே பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.

அதேநேரம், விமானமும் விபத்தில் சிக்காமல் தப்பித்தது.

மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட பயணிகள் மருத்துவமனையில் முதலுதவிக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கதவைத் திறந்த 30 வயது நபரை, காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தம்முடைய கை தவறுதலாக அக்கதவின் கைப்பிடி பட்டதால் இந்தச் செயல் நேர்ந்ததாகக் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments (0)
Add Comment