பல்சுவை முத்து :
“நான் சாந்தி நிகேதன் சென்றதிலிருந்து ஆசிரியர், மாணவர்களுடன் நெருங்கிப் பழகினேன்.
அவரவர்களே தங்களின் பணிகளைச் செய்து கொள்வதையும் கண்டேன். ஆசிரியர்களுக்கு ஓர் யோசனையைக் கூற முன்வந்தேன்.
சமையலுக்குத் தனியே சமையற்காரரை அமர்த்துவதைவிட நாமே அச்செயலை மேற்கொள்ளலாம் என்றேன்.
இதனால் மாணவர்களும். அவர்களின் பணியைக் கவனிக்கும் பொறுப்பைப் பெறுவார்கள்.
மற்றவர்களைவிட சமையலறையைச் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் நம்மால் வைத்துக்கொள்ள முடியும் என்று கூறினேன்.
ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் என் யோசனையை ஏற்றுக்கொண்டார்கள். புதுமையை விரும்பும் சிறுவர்களுக்கும் இதில் சம்மதமே.
ஆசிரியர்களுக்குச் சம்மதம் என்றால், எனக்கு சம்மதம்தான் என்றார். புதிய யோசனையில் அனைவரும் முழுமனதாக ஈடுபட்டனர்.
– காந்தியின் சுயசரிதை நூலான ‘சத்திய சோதனை’யிலிருந்து.