அனிருத் இசையில் கவின் நடிக்கும் புதிய படம்!

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், இசையமைப்பாளர் அனிருத் இசையில், இளைஞர்களின் கனவு நாயகனாக வலம்வரும் கவின் நடிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.

தமிழ் சினிமாவில் மாறுபட்ட படைப்புகளை வழங்கி, தொடர் ப்ளாக்பஸ்டர் வெற்றிகளைக் குவித்துவரும் நிறுவனம் ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தை நடன இயக்குநர் சதீஷ் இயக்குகிறார்.

டான்ஸராக திரைத்துறைக்குள் நுழைந்து, நடன இயக்குநராக வளர்ந்து நடிகராகவும் வலம் வரும் சதீஷ், இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

சமீபத்தில் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற டாடா படத்தின் மூலம் இளைஞர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் இளம் நாயகன் கவின் நாயகனாக நடிக்கிறார்.

சமீபத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்த அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி நாயகியாக நடிக்கிறார்.

இந்த கூட்டணியில் தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலமான இசையமைப்பாளர் அனிருத் இணைகிறார்.

கவின் படத்திற்கு அனிருத் இசையமைப்பது இதுவே முதல் முறை.

இளைஞர்களைக் கவரும் வகையில் இன்றைய தலைமுறையின் கதையைச் சொல்லும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகவுள்ளது.

படப்பிடிப்பு இன்று துவங்கி சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நடைபெறவுள்ளது.

Comments (0)
Add Comment