ரூ.2000 நோட்டை மாற்றிக் கொள்ளும் நடைமுறை இன்று முதல் அமல்!

மக்கள் மத்தியில் பெரிய அளவில் புழக்கத்தில் இல்லாத ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாகவும், அவற்றை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக் கொள்ளுமாறும் ரிசர்வ் வங்கி கடந்த 19-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நோட்டுகளை ஒருவர் தனது சொந்த வங்கி கணக்கில் டெபாசிட் செய்யலாம் என்றும் வங்கியில் நேரடியாக கொடுத்தும் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஒருமுறை அதிகபட்சம் ரூ.20 ஆயிரத்துக்கான ரூ.2000 நோட்டுகளை மாற்ற முடியும் என்றும் அதற்கு எந்த ஆவணமும் தேவையில்லை என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி வங்கியில் ரூ.2000 நோட்டை மாற்றிக் கொள்ளும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இதனிடையே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை சிரமமின்றி மாற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்றும் நோட்டுகளை மாற்ற அவசரம் காட்ட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

செப்டம்பர் 30 வரை நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் என்று சொன்ன போதும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று வணிகர்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment