சந்திராயன்-3: ஜூலை 12ல் ஏவப்படும்!

– இஸ்ரோ அறிவிப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்தியாவின் லட்சிய நிலவுத் திட்டமான சந்திராயன் – மூன்றை விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக் கட்ட பணியை முடித்துள்ளது.

அதன்படி சந்திராயன்-3 விண்கலம் ஜூலை 12இல் இஸ்ரோ விஞ்ஞானிகளால் விண்ணில் ஏவப்பட இருக்கிறது.

சந்திராயன்-2 பயணத்தின் தொடர்ச்சியாக இந்த சந்திராயன் – 3 திட்டத்தை இஸ்ரோ நடைமுறைப்படுத்த உள்ளது.

இது சந்திரனின் மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறங்குதல் மற்றும் உலாவுதல் மற்றும் லேண்டர்-ரோவர் கட்டமைப்பைக் கொண்டதாகும். இந்த ஆண்டு மார்ச் மாதம், சந்திரயான்-3 விண்கலம் அதன் சோதனைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்தது குறிப்பிடத்தக்கது.

சந்திராயன் திட்டத்தின் பகுதியான மூன்றாவது விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து GSLV Mk III என்றும் அழைக்கப்படும் இந்தியாவின் கனமான ஏவு வாகனமான Launch Vehicle Mark-III இல் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.  

Comments (0)
Add Comment