அமெரிக்காவில் ஆண்டுக்கு 50 ஆயிரம் மைல்கள் பயணித்து குழந்தைத் தொழிலாளர்களின் அவல நிலையை ஆவணப்படுத்தியவர் புகைப்படக் கலைஞர் லூயிஸ் ஹைன்.
மேலே உள்ள இந்தப் புகைப்படம் பற்றி, “மிகச் சிறிய குழந்தைகள் வேலை செய்கிறார்கள். அதிகாலை 3:30 மணிக்கு வேலையைத் தொடங்கி, மாலை 5 மணி வரை வேலை செய்ய எதிர்பார்க்கப்படுகிறது” என்று எழுதினார்.
சிகாகோவிலிருந்து புளோரிடா வரை நிலக்கரிச் சுரங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் குழந்தைகளை புகைப்படங்களாகப் பதிவுசெய்தார்.
இந்தப் புகைப்படங்கள் குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிராக ஒரு கூக்குரலை எழுப்ப உதவியாக இருந்தது.
மேலும், பிரச்னையின் தீவிரம் பற்றி அமெரிக்க மக்களுக்குப் பரவலாக தெரியப்படுத்தியது.
விளைவாக, 1904 ஆம் ஆண்டில் தேசிய குழந்தைத் தொழிலாளர் கமிட்டி போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இது குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு வழிவகுத்தது.