ஜானகி எம்ஜிஆரின் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடுக!

எம்.ஜி.ஆர் மன்றம் கோரிக்கை!

தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் ஜானகி எம்.ஜி.ஆர் அவர்களின் 100 வது ஆண்டு பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தும் விதமாக எம்.ஜி.ஆர் ரசிகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தூத்துக்குடி மூத்த எம்.ஜி.ஆர் ரசிகர்மன்ற கூட்டம் தூத்துக்குடி தனியார் கூட்ட அரங்கில் நடந்தது.

இக்கூட்டத்திற்கு முன்னாள் தூத்துக்குடி நகர எம்.ஜி.ஆர், ரசிகர்மன்ற தலைவர் எஸ்.சாமுவேல் தலைமை தாங்கினார்.

இதில், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் சத்யா இலட்சுமணன், துணைச்செயலாளர் கே.மிக்கேல், புது மார்கெட் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் எஸ்.வி. சந்தனராஜ், என். சண்முகராஜ் உட்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் கழகத்தின் ஆணிவேர் என்ற அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மற்றும் 1972 முதல் இன்றுவரை கழகத்தில் தொடர்ந்து பணியாற்றிவரும் மூத்த முன்னோடிகளை கௌரவிக்கும் வகையில் கழகத்தில் உள்ள அண்ணா அறக்கட்டளை மற்றும் எம்.ஜி.ஆர் அறக்கட்டளை சார்பில் அவரது குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி மற்றும் ஒரு பவுன் தங்க மோதிரம் வழங்க இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

2. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் 100வது ஆண்டு பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

3. அ.இ.அ.தி.மு.க. தலைமைக் கழகத்திற்கு அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் தனது பெயரில் உள்ள சொந்தக் கட்டிடத்தை வழங்கியும், மீண்டும் கழகம் இணையவும், இரட்டை இலை சின்னத்தை பெற்று தந்த அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் 100வது ஆண்டு பிறந்தநாளையொட்டி தலைமைக் கழகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிக் கொண்டாவும், அவரது திருவுருவுப் படத்தைத் திறந்து வைக்கவும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

4. தூத்துக்குடியில் அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் 100 வது ஆண்டு பிறந்தநாளையும், கழக நிறுவனர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கிக் கொண்டாடவும் கூட்டம் தீர்மானிக்கிறது.

கூட்டத்தில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் பி.ஜனார்த்தனம், கே.டி.சி.சகாயராஜ், ஏ.பழனி, ஏ.கோபால், என்.வீரபாண்டியன், இரா.குமாரவேல், அ.இ.அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் ஆட்டோ மாரியப்பன், பி.என்.டி.முருகேசன், மூத்த தொண்டன் முருகன் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர். ஜெயராஜ் நன்றி கூறினார்.

தகவல்: மு. சத்யா இலட்சுமணன்
தொடர்புக்கு: 9443433421

Comments (0)
Add Comment