பயன்படுத்தாமல் இருக்கும் கணக்குகளை நீக்கும் கூகுள்!

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்படுத்தப்படாமல் உள்ள கூகுள் கணக்குகள் நீக்கப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறைந்தது 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஜிமெயில் உள்ளிட்ட கணக்குகளை நீக்க உள்ளதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் கூகுள் கூறியுள்ளது.

வரும் டிசம்பர் மாதத்திற்கு பின்னரே நீக்கும் பணி தொடங்க உள்ளதாகவும், அதற்குள் சம்பந்தப்பட்ட பயன்படுத்தப்படாத கணக்குகளுக்கு, நீக்கப்படுவது சார்ந்த எச்சரிக்கை செய்தி அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.

இதுவரையில், பயன்படுத்தப்படாத கணக்குகளின் தரவுகள் மட்டுமே கூகுள் நிறுவனத்தால் நீக்கப்பட்டு வந்தது. தற்போது, மொத்த கணக்கையும் நீக்குவதற்கு கூகுள் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, கூகுள் கணக்கு நீக்கப்படும்போது, அதன் சார்பில் பயன்படுத்தப்பட்ட ஜிமெயில், டாக்குமெண்ட், யூட்யூப், போட்டோஸ், காலண்டர், டிரைவ் போன்ற பல்வேறு தளங்களின் தரவுகள் நீக்கப்படும் என்றும் எனவே, தங்கள் தரவுகளை பாதுகாக்க, பயனர்கள் அதற்குள் லாக் – இன் செய்து கணக்குகளை பயன்படுத்தினால் நடவடிக்கையை தவிர்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment