சைக்காலஜி படிக்க என்ன செய்ய வேண்டும்?

ஸ்ட்ரெஸ்… இன்று பெரும்பாலானோர் உச்சரிக்கும் ஒரு பொதுவார்த்தை. மேற்கத்திய உலகத்தில் எப்போதோ தொடங்கிவிட்ட மனநலம் சார்ந்த உரையாடல்கள் இப்போதுதான் நம் சமூகத்தில் மெள்ள மெள்ள துளிர்விடத் தொடங்கியிருக்கின்றன.

அதன் அடுத்தகட்டமாக மனநலனை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஆயத்தமாகியிருக்கிறார்கள் மக்கள்.

என்ன படிக்கலாம் என்று தேடும் மாணவர்களில் பலர் மனநலம் தொடர்பான படிப்புகளில் சேர ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கின்றனர்.

ஆனால், எங்கே படிப்பது, யாரெல்லாம் படிக்கலாம் என்பது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. 

மனநலம் சார்ந்த படிப்புகள் என்னென்ன, எங்கு படிக்கலாம், வேலைவாய்ப்பு எப்படி என்பது போன்ற கேள்விகளைக் கல்வியாளர் ராஜராஜன் முன் வைத்தோம், மிக விரிவாக விளக்கினார்.

‘சைக்காலஜி’ (Psychology) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மனிதனின் மனம் மற்றும் நடத்தை (behavior) ஆகியவை குறித்த அறிவியல்பூர்வமான படிப்பு என்று பொருள்.

சைக்காலஜி’ என்ற பதம் கிரேக்க வார்த்தையில் இருந்து பெறப்பட்டது.

மனம் அல்லது ஆத்மா என்று பொருள்படும் சைக்கி’ (psyche) என்ற சொல்லும் படிப்பு என்று பொருள்படும் லாஜியா’ (logia) என்ற சொல்லும் சேர்ந்து Psychology (உளவியல்) என்ற சொல் பிறந்தது.

மனநிலை மற்றும் அதனால் உடல்நலனுக்கு ஏற்படும் பிரச்னைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மனிதன் நல்வாழ்வு வாழ வழிகாட்டும் படிப்புதான் உளவியல்.

உளவியல் சார்ந்த படிப்புகள் என்னென்ன?

இளநிலை (UG) அளவில் பி.ஏ (B.A) மற்றும் பி.எஸ்ஸி (B.Sc.) படிப்புகள் இருக்கின்றன. இதில் ‘சைக்காலஜி’ (Psychology), ‘அப்ளைடு சைக்காலஜி’ (Applied Psychology), ‘கவுன்சலிங் சைக்காலஜி’ (Counselling psychology), ‘ஜர்னலிசம்’ (Journalism), ‘சைக்காலஜி அண்ட் இங்கிலிஷ்’ (Psychology and English) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன.

முதுநிலை (PG) அளவில் எம்.ஏ (M.A) மற்றும் எம்.எஸ்ஸி (M.Sc.) படிப்புகள் இருக்கின்றன.

இதில் ‘சைக்காலஜி’ (Psychology), ‘கவுன்சலிங்’ Counseling, ‘கவுன்சலிங் அண்ட் சைக்கோதெரபி’ (Counselling and Psychotherapy), ‘ஸ்போர்ட்ஸ் சைக்காலஜி’ (Sports psychology), ‘கிளினிக்கல் சைக்காலஜி’ (Clinical psychology) போன்ற படிப்புகள் இருக்கின்றன.

கிளினிக்கல் சைக்காலஜி’ படிப்பை மருத்துவத்தில் இளநிலை, முதுநிலை, பட்டயம், முதுநிலைப் பட்டயப் படிப்புப் படித்தவர்கள் படிக்கலாம்.

கவுன்சலிங் சைக்காலஜி’ (Counselling Psychology) படிப்பை கல்வி, தத்துவம், சமூக இயல், மானுடம், பொதுத்தொடர்பு, விளையாட்டு போன்ற துறைகளில் படித்தவர்கள் படிக்கலாம்.

ஆர்கனைசேஷனல் / இண்டஸ்ட்ரியல் சைக்காலஜி’ (Organizational \ Industrial Psychology) படிப்பை மேலாண்மை, பொதுநிர்வாகம், பொதுத்தொடர்பு உள்ளிட்ட படிப்புகளைப் படித்தவர்கள் இதைப் படிக்கலாம்.

டெவலப்மென்டல் / சைல்டு சைக்காலஜி’ (Developmental \ child Psychology) படிப்பை மருத்துவத்துறை, அறிவியல், உயிரியல், மருத்துவத் துறையில் குழந்தை மருத்துவம் படித்தவர்கள் இத்துறையைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஸ்போர்ட்ஸ் சைக்காலஜி’ (Sports Psychology) படிப்பை விளையாட்டுத் துறை, உடலியக்கவியல், விளையாட்டு மருத்துவம் மற்றும் பல்வேறு விளையாட்டு உட்பிரிவுகளை படித்தவர்கள், விளையாட்டு வீரர்கள் இதைப் படிக்கலாம்.

தடயவியல் உளவியலாளர்கள்’ (Forensic Psychology) படிப்பை மருத்துவம் படித்தவர்கள், இயற்பியல் படித்தவர்கள் தேர்வு செய்யலாம்.

உளவியல் படிப்புகளை யார் படிக்கலாம்?

மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவை எடுத்துப் படித்தவர்கள் இளநிலை அளவில் உளவியல் படிப்புகளில் சேரலாம்.

பொதுவாக இந்த வகைப் படிப்புகளில் சேர மேல்நிலைப் படிப்பில் 50 சதவிகித மதிப்பெண்கள் அவசியம்.

அதேநேரம், படிப்புகளில் சேர்வதற்கான கல்வித் தகுதியை குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களே நிர்ணயிக்கின்றன.

இளநிலை உளவியல் படிப்பு முடித்தவர்கள், அதைத் தொடர்ந்து முதுநிலை, எம்.பில் மற்றும் பிஹெச்.டி படிப்புகளை முடிக்கலாம்.

இளநிலை, முதுநிலை மருத்துவம் படித்தவர்கள் உளவியல் சிறப்புப் பிரிவைத் தேர்வு செய்து படிக்கலாம். பொதுவாக மருத்துவத் துறையில் நரம்பியல்’ (Neurology), பொது மருத்துவம்’ (General Medicine) படித்தவர்கள் உளவியல் படிப்பை எடுத்துப் படிக்கலாம்.

அதேபோல், கல்வி, தத்துவவியல், சமூகவியல், பொதுத்தொடர்பு போன்ற துறைகளில் இளநிலை பட்டம் பெற்றவர்கள் உளவியலில் முதுநிலை படிக்கலாம்.

உளவியல் படிப்புகள் – உளவியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலம், குழந்தைகள் நலம், மனநலம் ஆகியவை அரசு மற்றும் அரசுசாரா அமைப்புகள், விளையாட்டுத் துறை, கல்வி நிலையங்கள், காவல்நிலையங்கள், நீதித்துறை, மருத்துவமனைகள் போன்றவற்றில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

மருத்துவ உளவியலாளர்கள் (Clinical Psychologists)

மருத்துவமனைகள், போதை மறுவாழ்வு மையங்கள், அரசு சாரா அமைப்புகளில் பணி வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆர்கனைசேஷனல் / தொழில்துறை உளவியலாளர்கள் (Organizational / Industrial Psychologists)

மனிதவள நிறுவனங்கள், நிறுவன ஆலோசனை மையங்கள், பள்ளி, கல்லூரிகளில் வாய்ப்புகள் உண்டு.

டெவலப்மென்டல் / குழந்தை உளவியலாளர்கள் (Developmental / Child Psychologists)

குழந்தைகள் நல மருத்துவமனைகள், அங்கன்வாடிகள், மனநல மருத்துவமனைகள், மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு மையங்கள், மாற்றுத் திறனாளிகள், பார்வைக் குறைபாடு கொண்டவர்களின் மறுவாழ்வு மையங்கள் இவற்றில் மேற்கண்ட படிப்பு படித்தவர்களின் தேவை அதிகம்.

விளையாட்டு உளவியலாளர்கள் (Sports Psychologists)

விளையாட்டு தொடர்பான அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள், அகாடமி, முகாம்கள் இவற்றில் விளையாட்டு உளவியலாளர்களின் பணி இன்றியமையாதது.

தடயவியல் உளவியலாளர்கள் (Forensic Psychologists)

குற்றவியல், தடவியல்துறை, காவல்துறை, புலனாய்வுத்துறை ஆகியவற்றில் வாய்ப்புகள் உண்டு.

தமிழகத்தில் எந்தெந்தக் கல்லூரிகளில் உளவியல் படிப்புகள் படிக்கலாம்?

1. ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி – சென்னை

2. பிரசிடென்சி கல்லூரி – சென்னை

3. எத்திராஜ்

4. ஜஸ்பால் பஷீர் அகமது சாயீத் பெண்கள் கல்லூரி – சென்னை

5. பெண்கள் கிறிஸ்துவக் கல்லூரி – சென்னை

6. ரத்தினம் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் – கோவை

7. பி.எஸ்.ஜி. காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் – கோவை

8. டாக்டர் எம்.ஜி.ஆர் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் – சென்னை

9. ராமச்சந்திரா இன்ஸ்டிடியூட் – சென்னை

10. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் – சென்னை

11. டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி – சென்னை

12. பாரதியார் பல்கலைக்கழகம் – கோவை

13. ஶ்ரீசரஸ்வதி தியாகராஜா கல்லூரி – கோவை

14. சென்னைப் பல்கலைக்கழகம்

15. செட்டிநாடு அகாடமி ஆஃப் ரிசர்ச் அண்ட் எஜுகேஷன் – காஞ்சிபுரம்

16. அவினாசிலிங்கம் இன்ஸ்டிடியூட் – கோவை

17. அழகப்பா பல்கலைக்கழகம் – காரைக்குடி

18. சத்யபாமா பல்கலைக்கழகம் – சென்னை

19. சென்னை ஐ.ஐ.டி

20. டி.கே.எம். கலை அறிவியல் கல்லூரி – வேலூர்

21. டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரி – சென்னை

22. ஹோலிகிராஸ் கல்லூரி – திருச்சி

23. தியாகராஜா கல்லூரி – மதுரை

24. சவிதா மருத்துவக் கல்லூரி – சென்னை

25. மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க் – சென்னை

26. மத்தியப் பல்கலைக்கழகம் – திருவாரூர்

27. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் – திருநெல்வேலி

28. பெரியார் பல்கலைக்கழகம் – சேலம்

29. தமிழ்நாடு உடற்கல்வியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் – சென்னை

30. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் எம்பவர்மென்ட் ஆஃப் பெர்சன்ஸ் வித் மல்டிபிள் டிஸபிலிட்டிஸ் (National Institute for Empowerment of Persons with Multiple Disabilities) – சென்னை

31. அரசு கலைக் கல்லூரி – கோவை

32. சேக்ரட் ஹார்ட் காலேஜ் – திருப்பத்தூர்

33. அமெரிக்கன் கல்லூரி – மதுரை

34. ராஜீவ்காந்தி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் யூத் டெவலப்மெண்ட் – சென்னை

35. பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகம்

தொலைதூரக் கல்வி

1. இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகம்

2. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்

3. பாரதியார் பல்கலைக்கழகம்

4. அழகப்பா பல்கலைக்கழகம்

5. இன்ஸ்டிடியூட் ஆப் கரஸ்பான்டன்ஸ் – சென்னை

6. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

7. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

8. தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் யுனிவர்சிட்டி

9. ராமச்சந்திரா பல்கலைக்கழகம்

10. கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ்.

– நன்றி: விகடன் இதழ்

Comments (0)
Add Comment