பிரதமர் மோடி பெருமிதம்
ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் வசிக்கும் நசகத் சவுத்திரி என்பவர் ஒன்றிய அரசின் ஒரே இந்தியா, வலிமையான இந்தியா என்ற திட்டத்தின் கீழ் அசாம் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்திருந்தார்.
அந்த சுற்றுப்பயணம் தனக்கு உத்வேகம் அளித்ததாகவும், வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். அவருக்கு பிரதமர் மோடி பதில் கடிதம் எழுதி உள்ளார்.
அந்தக் கடித்ததில், “இந்தியா பல கலாச்சாரங்கள், உணவு வகைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளின் தாயகமாகும்.
இங்கு வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்கள், வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறவர்கள் வசித்து வருகிறார்கள்.
வெவ்வேறு சடங்குகளைக் கடைப்பிடிப்பது மட்டுமல்லாமல், ஒருவருக்கொருவர் மாறுபட்ட வாழ்க்கை முறையைக் கொண்டாடுகிறார்கள்.
இதை மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள இதுபோன்ற முயற்சிகள் மாநிலங்களையும் கலாச்சாரங்களையும் ஒருவருக்கொருவர் நெருக்கமாகக் கொண்டு வருகிறது.
இதுபோன்ற முயற்சிகள் தேசத்தின் ஒற்றுமையை பலப்படுத்துகிறது. இந்த பன்முகத்தன்மை தான் உலகத்தை நம் பக்கம் ஈர்த்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.