ஐபிஎல் தொடரில் நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை குவித்தது. தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய ஷுப்மன் கில் 58 பந்துகளில் 13 பவுண்டரிகள், 1 சிக்சர் என 101 ரன்களை விளாசினார்.
சாய் சுதர்சன் 36 பந்துகளில் 6 பவுண்டரிகள், 1 சிக்சர் அடித்து 47 ரன்களில் ஆட்டமிழந்தார். ஐதராபாத் சார்பில் புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது. குஜராத் அணியின் பந்துவீச்சால் ஐதராபாத் அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
இதனால் ஐதராபாத் அணி 59 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட் இழந்து தத்தளித்தது. கிளாசன் மட்டும் தனியாகப் போராடி அரை சதம் கடந்தார். அவர் 64 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இறுதியில், ஐதராபாத் அணி 154 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 34 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றதுடன் பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது. குஜராத் அணி சார்பில் முகமது ஷமி, மோகித் சர்மா ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.