காதலுக்கு மாற்று வழி கிடையாது!

– இயக்குநர் ராஜூ முருகன்

அமேசான் ஒரிஜினல் தொடர் ‘மாடர்ன் லவ் சென்னை’ மே 18, 2023 அன்று 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகிறது.

இந்நிலையில் சென்னையில் முன்னோட்ட வெளியீட்டு விழா நிகழ்வில் பங்கேற்றுப் பேசினார் ஆன்தாலஜி இயக்குநர்களில் ஒருவரான ராஜூ முருகன்.

அப்போது பேசிய அவர், “கொரோனா காலகட்டத்தின் போது நண்பர் தியாகராஜன் குமாரராஜா போன் மூலம் தொடர்புகொண்டு மார்டன் லவ் படைப்பை குறித்து பேசினார்.

அந்த காலகட்டத்தின்போது பலரும் மன அழுத்தத்தில் இருந்தனர். எனக்கு எதையாவது எழுதத் தொடங்கினால் உடனடியாக அரசியல் வந்துவிடுகிறது. இது மிகப்பெரும் சிக்கலாக உருவெடுத்துவிட்டது.

இந்த மனச் சிக்கலிலிருந்து வெளியே வரவேண்டும் என்று நானே பல காலமாக திட்டமிட்டிருந்தேன். அப்போது தியாகராஜன் குமாரராஜா மாடர்ன் லவ் என்று சொன்னதும் உடனடியாக ஒப்புக்கொண்டேன்.

உலகம் மாற மாற அனைத்துக்கும் ஒரு மாற்று வழி வந்துவிட்டது. ஆனால் மனிதனுக்கு மாற்று கிடைக்காத ஒரே விசயம் காதல்தான். அன்பு செலுத்த இயந்திரங்களுக்கு தெரியாது.

ஒருவேளை உடலுறவைக்கூட இயந்திரங்கள் வழங்கலாம். ஆனால் அன்பைச் செலுத்த தெரியாது. ஏனெனில் காதல் என்பது ஒரு உணர்வு. அதனால்தான் காதல் எப்போதும் அனைத்து இடத்தில் இருக்கிறது.

காதலின் அனைத்து கோணங்களும் இந்த அத்தியாயங்களில் இடம்பிடித்திருக்கிறது.

‘லாலாகுண்டா பொம்மைகள்’ என்பது சென்னையில் உள்ள ஒரு பகுதி. இந்தப் பகுதியில் நடைபெறும் கதை. நாம் அனைவரும் பொம்மைகள்தான்” என்றார்.

Comments (0)
Add Comment