அனைத்துத் துறைகளிலும் பாலியல் துன்புறுத்தலை விசாரிக்கக் குழு!

– உச்சநீதிமன்றம் உத்தரவு

அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பாலியல் துன்புறுத்தல் தொடா்பான புகார்களை விசாரிக்கும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதிசெய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துறைத் தலைவரான ஆரேலியானோ ஃபொ்னாண்டஸ் என்பவா் மீது பாலியல் குற்றச்சாட்டில், பல்கலைக்கழக நிர்வாக கவுன்சில் நடவடிக்கை மேற்கொண்டது.

அதன்படி, அவா் பணிநீக்கப்பட்டதுடன், எதிர்கால வேலைவாய்ப்பில் இருந்தும் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

நிர்வாக கவுன்சிலின் இந்த உத்தரவுக்கு எதிராக ஃபொ்னாண்டஸ் தாக்கல் செய்த மனுவை மும்பை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் அவா் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமா்வு விசாரித்தது.

அப்போது ஃபொ்னாண்டஸுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு விசாரணை நடைமுறைகளில் குறைபாடுகள் காணப்படுவதாகவும்; இயற்கை நீதி கோட்பாடுகள் மீறப்பட்டுள்ளதாகவும் கூறி மும்பை உயா்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது.

அதோடு, பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம்-2013இன் அமலாக்கத்தில் தீவிர குறைபாடுகள் நிலவுவதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள்,

அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பாலியல் துன்புறுத்தல் தொடா்பான புகார்களை விசாரிக்கும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Comments (0)
Add Comment