பழைய பாலத்தை வெடிவைத்துத் தகர்த்த ஜெர்மனி!

ஜெர்மனியின் டார்ட்மண்ட் – அஸன்பார்க் இடையிலான நெடுஞ்சாலையில் லீடன்ஷிட் பகுதியில் 1968 – ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான பாலம் ஒன்று மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது.

453 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் சிதிலமடைந்து காணப்பட்டதால் புதிய பாலம் கட்ட அந்நாட்டு அரசு திட்டமிட்டது.

எனவே புதிய பாலம் கட்டுவதற்காக பயன்பாட்டில் இருந்த அந்த பழமையான பாலம் 150 கிலோ வெடிபொருட்கள் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

முன்னதாக சுற்றியிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அருகில் உள்ள கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாலம் தகர்க்கப்பட்டதை மக்கள் பலர் பார்வையிட்டதுடன் தங்களின் செல்போனில் பதிவு செய்தனர்.

Comments (0)
Add Comment