ரசிகர்களைக் கவர்ந்த தி ரோட் படத்தின் மேக்கிங்!

திரிஷா நடிக்கும் “தி ரோட்” திரைப்படத்தின் மேக்கிங் டீஸர் முதல்முறையாக இணையதளத்தில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியானது.

நடிகை திரிஷாவின் திரைப்பயணத்தில் “தி ரோட்” மிகப்பெரியப் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் இரு பாகங்களுக்குப் பிறகு “தி ரோட்” திரைப்படத்தை திரிஷா பெரிதும் எதிர்பார்த்துள்ளார்.

அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் “திரிஷா” மற்றும் “சார்ப்பட்டா” புகழ் டான்சிங் ரோஸ் “சபீர்”, சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ். பாஸ்கர், வேலராமமூர்த்தி, விவேக் பிரசன்னா ஆகிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் “தி ரோட்”.

மதுரையில் நடந்த சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் அருண் வசீகரன் தெரிவித்துள்ளார்.

இப்படத்திற்காக நடிகை திரிஷா மற்றும் படக்குழுவினர் அனைவரும் மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைகள், காடுகள் என மிக கடுமையான இடங்களுக்கு சென்று படப்பிடிப்பு மேற்க்கொண்டுள்ளனர்.

மேலும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த தீபாவளி அன்று வெளியாகி திரிஷா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை திரை பிரபலங்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

Comments (0)
Add Comment