அமெரிக்கா தகவல்
உக்ரைன் போரில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 20,000-க்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா, உக்ரைன் மீது போர் தாக்குதலைத் தொடங்கியது. அதற்கு உக்ரைன் தக்க எதிர்த்தாக்குதலை நடத்தி களத்தில் நின்று கொண்டு இருக்கிறது.
உக்ரைனின் குடியிருப்பு பகுதிகளில் ரஷ்யா ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், ரஷ்யா போதுமான பயிற்சியின்றி வீரர்களைச் சண்டைக்கு அனுப்பியதன் விளைவாக, கடந்த டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்ததாகவும், அதில், 20,000 பேர் மரணமடைந்துவிட்டதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
உக்ரைனின் பாக்முத் நகரில் 5 மாதங்களுக்கு மேலாக மோதல் நீடித்து வரும் நிலையில், இந்த பகுதியில் களமிறக்கப்பட்ட ரஷ்யப் படைகள் பெரும் பின்னடைவைச் சந்தித்திருப்பதாக அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கர்பி தெரிவித்துள்ளார்.