மூத்தக் குடிமக்களுக்கான சலுகை ரத்தால் ரூ.2,242 கோடி வருவாய்!

  • ரயில்வே துறை

கொரோனா பாதிப்பை தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு ரயில்வேயில் முதியோருக்கான கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டது. இந்த சலுகை இன்னமும் திருப்பித் தரப்படவில்லை.

இந்நிலையில், மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த மனுவுக்கு ரயில்வே துறை பதிலளித்துள்ளது.

அதில், ”2022, ஏப்ரல் ஒன்று முதல் கடந்த மார்ச் 31 வரை சுமார் 8 கோடி முதியவர்களுக்கு ரயில்வே கட்டணத்தில் சலுகை வழங்கப்படவில்லை.

இதில் 4.6 கோடி பேர் ஆண்கள், 3.3 கோடி பேர் பெண்கள் மற்றும் 18,000 பேர் திருநங்கைகள். இந்தக் காலகட்டத்தில் முதியோர் பயணிகளின் மொத்த வருவாய் ரூ.5,062 கோடி கிடைத்துள்ளது.

முதியோருக்கான சலுகை ரத்து மூலம் மட்டுமே கூடுதலாக ரூ.2,242 கோடி வருவாய் ரயில்வேக்கு கிடைத்துள்ளது. கடந்த 2020 மார்ச் 20 முதல் 2022 மார்ச் 31 வரையிலும் 7.31 கோடி முதியவர்களுக்கு ரயிலில் சலுகை வழங்கப்படவில்லை” எனக் கூறப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment