சதுரங்க சாம்பியன் மாணவியை வாழ்த்திய உதயநிதி!

சென்னை தியாகராய நகரிலுள்ள ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியின் முதலாமாண்டு மாணவியான வே.ரிந்தியா, ஈரான், ஸ்லோவின்யா, தாய்லாந்து, அங்கேரி, ஃபிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், துபாய், லாட்வியா போன்ற பல நாடுகள் சென்று, சதுரங்க விளையாட்டுப் போட்டிகளில் வென்றுவருகிறார்.

தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு வெள்ளி, தங்கம், மற்றும் வெண்கலப் பதக்கங்களைக் குவித்துள்ளார்.

தமிழகத்தின் பெருமையை சர்வதேச அளவில் பறைசாற்றிக் கொண்டிருக்கும் வே.ரிந்திகாவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்திப் பாராட்டினார்.

நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஷசுன் கல்லூரியின் முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் அமைச்சரைச் சந்தித்து சதுரங்க மாணவி ரிந்திகா வாழ்த்துப் பெற்றார்.

Comments (0)
Add Comment