- எவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது..!
- மனிதர்களை விடவா நரிகள் தந்திரமானவை? எந்த நரி காப்பி சாப்பிட்டுக் கொண்டு, அடுத்த நரியை கெடுக்க யோசிக்கிறது.?
- மிருகங்கள் இன்னொரு ஜீவனை சிநேகித்துவிட்ட பிறகு, அந்த சிநேகத்தை மனிதர்களைப் போல மறுபரிசீலனை பண்ணுவதில்லை.
- எவ்வளவு கால் பட்டுக் கசங்கினாலும் தினம் தினம் புற்கள், பூக்கள் முளைக்கவும், மலரவும் செய்கின்றன. நம்பிக்கை தானே வாழ்க்கை.
- மயிலிறகு குட்டி போடாது என்பது புரிய ஆரம்பிக்கும் போது பால்யத்தின் சிறகுகள் உதிரத் தொடங்குகிறது.
- பிறக்கும்போதே இறக்கைகளுடன் பிறந்த பறவை போன்றது மனது. அதை பறக்கக்கூடாது என்று எப்படிச் சொல்வது?
- எல்லோருக்கும் ஒரு வாழ்க்கையிருக்கும் அந்த வாழ்க்கையை எழுதுங்கள். எழுதுவதால் நீங்கள் இந்தச் சமூகத்தின் மனசாட்சியைத் தொடலாம். சக மனிதனுக்கு நம்மால் நம் அன்பை எழுத்தின் வழியே கடத்துவோம் அதைவிட வேறு என்ன செய்துவிட முடியும் நம்மால்?
- காடுகள் மாத்திரம்தானா ரகசியங்களைப்பொதிந்து வைத்துக் கொண்டிருக்கின்றன. மனிதர்களும்தான் ஒவ்வொருவரிடமும் எத்தனை ரகசியங்கள்!
– எழுத்தாளர் பிரபஞ்சன்