தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் தான்யா ரவிச்சந்திரன். தமிழில் பலே வெள்ளையத்தேவா, பிருந்தாவனம், கருப்பன், மாயோன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘கருப்பன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்தாண்டு இவரது நடிப்பில் வெளியான ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின், பிக்பாஸ் ஆரி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான ட்ரிகர், காட்பாதர் உள்ளிட்ட அனைத்து படங்களும் பரவலான விமர்சனங்களைப் பெற்றது.
பின்னர் தெலுங்கு பக்கம் சென்ற அவர், 4 ஆண்டுகள் தமிழில் நடிக்கவில்லை.
சமீபத்தில் வெளியான ‘அகிலன்’ படத்தில் ஜெயம் ரவியின் மனைவியாக நடித்தார். தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தான்யா ரவிச்சந்திரன் தனது பிறந்தநாளை ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடினார்.
ரசிகர்களுக்கு உணவு பரிமாறியும், கேக் வெட்டியும், புகைப்படங்கள் எடுத்தும் தனது பிறந்தநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடிய தான்யாவின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.