16-வது ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நடகரங்களில் நடைபெற்று வருகின்றன.
இதன் 35 வது லீக் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்றது. குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய இந்தப் போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரர் ஷுப்மன் கில் அதிரடியாக ஆடி 56 ரன்கள் குவித்தார். டேவிட் மில்லர் 22 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 46 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் மும்பை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
இறுதியில், மும்பை அணி 9 விக்கெட்டுக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற குஜராத் அணி, புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்திற்குச் சென்றது.