30 லட்சம் பார்வையாளர்களைக் கடந்த ‘கழுவேத்தி மூர்க்கன்’ டீசர்!

நடிகர் அருள்நிதி, தனித்துவமான கதை அம்சம் கொண்ட திரைக்கதைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தன் படங்களைத் திரையரங்குகளுக்குப் பார்க்க வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளார்.

அவரது முந்தைய படங்களின் வெற்றி இதையே நிரூபிக்கிறது.

தற்போது கௌதமராஜ் இயக்கத்தில், ஒலிம்பியா மூவீஸின் அம்பேத்குமார் தயாரிப்பில் ‘கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படத்தின் மூலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு கிராமப்புற பின்னணியில் நடக்கும் கதைக்களத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.

தற்போது வெளியாகியுள்ள இந்த டீசரில் இருந்து ஆக்‌ஷன், காதல், குடும்ப உணர்வுகள் என படம் 100% குடும்ப பொழுதுபோக்குடன் இருக்கும் என்பதை தெளிவாக உறுதிப்படுத்துகிறது.

துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார் மற்றும் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனிஷ்காந்த், சரத் லோஹிதாஸ்வா, ராஜா சிம்மன், யார் கண்ணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Comments (0)
Add Comment