மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைத்தால், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமைப்பு முறையில் மாற்றம் செய்யப்படும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.
கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அங்கு தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
அங்குள்ள பெலகாவி மாவட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துப் பேசிய ராகுல் காந்தி மத்தியில் உள்ள பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்தார். அப்போது, பேசிய அவர், நாட்டில் உள்ள வசதி படைத்தவர்களுக்கு ஆதரவாகவே ஜி.எஸ்.டி. கொண்டு வரப்பட்டதாக குற்றம் சாட்டினார்.
ஜி.எஸ்.டி. தாக்கல் செய்யும் முறை பெருவாரியான மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதாகக் கூறிய அவர், இதனால் சிறு வணிகர்கள் கடுமையான பாதிப்பை சந்திப்பதாகவும் விமர்சித்தார்.