இரு நாட்டு எல்லைப் பிரச்சனைக்கு எப்போது தீர்வு கிடைக்கும்?

இந்தியா சீனா ராணுவ உயரதிகாரிகள் மத்தியிலான 18 வது சுற்றுப் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை தெரியவந்துள்ளது.  

லடாக் கிழக்கு பகுதியின் எல்லையில், அண்டை நாடான சீனா, 2020ல் தன் படைகளை குவித்தது. இதையடுத்து, இந்திய எல்லையிலும், படைகள் குவிக்கப்பட்டன.

இரு நாடுகள் தரப்பிலும் தலா, 60 ஆயிரம் வீரர்கள் வரை குவிக்கப்பட்ட நிலையில், எல்லையில் போர் பதற்றம் அதிகரித்தது.

இதையடுத்து, எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக, இருநாட்டு ராணுவ அதிகாரிகள் தரப்பிலும், பலமுறை பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

கடைசியாக, கடந்தாண்டு டிசம்பர் மாதம், 17வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில், எல்லைப் பிரச்சினையில் படைக்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண நேற்று இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் கிழக்கு லடாக் எல்லை அருகில் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதில், டெப்சாங், டெம்சோக் போன்ற மலைப் பகுதிகளில் சீனப்படைகளை நீக்க வேண்டும் என்று இந்தியாவின் சார்பில் வலியுறுத்தப்பட்ட போதும் சீன ராணுவத்தினர் அதில் அவசரம் காட்டவிரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

Comments (0)
Add Comment