அதிசயங்கள் நிறைந்த உலகத்திற்கு செல்லத் தயாராகுங்கள்!

அயலான் பட இயக்குநரின் நம்பிக்கை

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ஆர். ரவிகுமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படைப்பு ‘அயலான்’ பற்றிய புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுபற்றி அறிக்கை வெளியிட்டுள்ள தயாரிப்பு நிறுவனம், “இந்த திரைப்படத்தை இடைவிடாத கடின உழைப்பை செலுத்தி படமாக்கியுள்ளோம். மேலும் பல தடைகளை தாண்டி, ‘அயலான்’ அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

“அயலான்” திரைப்படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாத நாங்கள், படத்தின் CGI காட்சிகளுக்கு பெரும் மெனக்கெடலுடன் பணி புரிந்துள்ளோம்.

அதிக எண்ணிக்கையிலான CGI காட்சிகளைக் கொண்டிருக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது.

திரைப்படம் கச்சிதமாக முழுமையடைய போதிய நேரம் தேவைப்பட்டது. படம் முழுவதும் வரும் வேற்றுகிரகவாசி கதாபாத்திரம் அனைவரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தபட்டுள்ளது.

மேலும், 4500+ VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக ‘அயலான்’ இருக்கும் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

‘அயலான்’ மூலம் கற்பனைக்கு அப்பாற்பட்ட, அதிசயங்கள் நிறைந்த புதிய உலகத்திற்கு செல்ல தயாராகுங்கள்” என்று தெரிவித்துள்ளது.

Comments (0)
Add Comment