பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்
புதியதோர் உலகம் செய்வோம்
கெட்ட போரிடும் உலகத்தை
வேரோடு சாய்ப்போம்
பொதுவுடமைக் கொள்கை
திசை எட்டும் சேர்ப்போம்.
தமிழ் உயர்ந்தால்
தமிழன் உயர்வான்.
தமிழ் தாழ்ந்தால்
தமிழன் வீழ்வான்.
உன் தாயை பழித்தவனை
தாய் தடுத்தால் விட்டுவிடு,
தமிழை பழித்தவனை
உன் தாய் தடுத்தாலும் விடாதே.
எங்கள் தமிழ் உயர்வென்று
நாம் சொல்லிச் சொல்லி
தலைமுறைகள் பலகழித்தோம்
குறைகளைந்தோ மில்லை.!
செய்யத் துணிபவனுக்கு,
எண்ணத் துணிபவனுக்குத்தான்
வெற்றி கிட்டுகிறது.
மழை என்பது இயற்கையின் கொடை.
அது விரும்பி அழைத்தாலும் வாராது.
புலம்பிப் போவென்றாலும் போகாது.