விடுதலை வீரர்களை நெஞ்சில் நிறுத்துவோம்!

தூக்குமேடை ஏறும் முன்பு, அவருடைய பற்கள் சுத்தியல் கொண்டு உடைக்கப்பட்டன. விரல்களிலிருந்து நகங்கள் சதையோடு பிடிங்கி வீசப்பட்டன. உடலின் ஒவ்வொரு மூட்டு இணைப்பும் முறிக்கப்பட்டது.

இவை அனைத்திற்கும் பிறகு, அவரை தூக்கில்போட்டு, உடலை வங்கக் கடலில் தூக்கி வீசினர். அப்போது அவருக்கு வயது – 37.

அவர்தான் சிட்டகாங் புரட்சி வீரர் சூர்யா சென். யுகாந்தர் அமைப்பை உருவாக்கியவர்.

கொடூர சித்ரவதைகளை அனுபவித்து சுயநினைவை இழப்பதற்கு முன் அவர் கூறியது இதுதான்.

“மரணம் என் வாசல் கதவைத் தட்டுவது என் காதில் கேட்கிறது. என் மனம் எல்லையற்ற பெருவெளியை நோக்கி மெல்லப் பறக்கத் தொடங்கிவிட்டது.

இந்த மரணப்பொழுதில் ஒன்றை மட்டும் என் நண்பர்களிடம் நினைவாக விட்டுச்செல்கிறேன். அதுதான் சுதந்திர இந்தியா என்ற என் பொற்கனவு”

1930 ஏப்ரல் 18 வெள்ளிக் கிழமை நள்ளிரவுதான் சிட்டகாங்கில் இளம் புரட்சி வீரர்கள் சூர்யாசென், நிர்மல்சென், கல்பனாதத், பிரீத்திலதா ஆகியோரால் நகரம் முற்றுகையிடப்பட்டது. இதையொட்டியே வெள்ளை ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர்.

நன்றி:  தோழர் கணேசன் முகநூல் பதிவு

Comments (0)
Add Comment