அஸ்வின்ஸ்: அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் ஹாரர் த்ரில்லர்!

வளர்ந்து வரக்கூடிய திரைப்படத் துறையில், தரமான நல்ல கதைகள் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைகிறது. ‘அஸ்வின்ஸ்’ படத்தின் பின்னால் இருக்கும் ஆர்வமுள்ள திறமையான குழு நல்ல கதையுடன் படத்தின் வெற்றியை நிரூபிக்கத் தயாராக உள்ளது.

இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை மதிப்புமிக்க ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிலிக்ஸ் நல்ல விலைக்கு வாங்கியுள்ளது.

உளவியல், ஹாரர் த்ரில்லர் வகையில் உருவாகியுள்ள ‘அஸ்வின்ஸ்’ படத்தின் மூலம் தருண் தேஜா இயக்குநராக அறிமுகமாகிறார். இது அவரது 20 நிமிட பைலட் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டது.

விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் ‘தரமணி’ மற்றும் ‘ராக்கி’ புகழ் வசந்த் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இருளில் இருந்து மனித உலகிற்கு தீமையை கட்டவிழ்த்துவிடும் 1500 ஆண்டு பழமையான சாபத்திற்கு அறியாமலேயே பலியாகும் யூடியூபர்களின் கூட்டத்தை சுற்றிக் கதை நடக்கிறது.

வரவிருக்கும் இந்த திரைப்படத்தில் விமலா ராமன், முரளிதரன், சரஸ் மேனன், உதய தீப் மற்றும் சிம்ரன் பரீக் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Comments (0)
Add Comment