எம்.ஜி.ஆருடன் நாடகக் கலைஞர்கள்!

அருமை நிழல் :

நாடகக் கலைஞர்கள் தன்னைச் சந்திக்க வந்தால், மதிப்புக் கொடுத்து வரவேற்று உபசரிப்பார் எம்.ஜி.ஆர்.

மதுரையில் பிரபலமானது தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம். பல மூத்த நடிகர்களைக் கொண்ட அந்தச் சங்கம் உருவானது 1923 ல்.
தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்படுவதற்கு முன்பே இப்படியொரு பெயர் சூட்டப்பட்டது தான் வியப்பு.

அதன் நிர்வாகப் பொறுப்பில் இருந்த நாடக நடிகர்கள் சென்னை ராமாவரம் தோட்டத்தில் சந்தித்தபோது, எம்.ஜி.ஆர். கேஷூவலாக உட்கார்ந்து உரையாடும் புகைப்படம்.

இப்போதும் மதுரை நாடக நடிகர் சங்கத்தில் இந்தப் படத்தைப் பார்க்க முடியும்.

Comments (0)
Add Comment