ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வி!

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்டி சென்னை அணியின் கேப்டனாக தோனிக்கு 200வது போட்டியாகும். டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 10 ரன்களில் அவுட்டானார். ஜாஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்த படிக்கல் அதிரடியாக ஆடினார். இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்துள்ளது.

ஹெட்மயர் 30 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா, ஆகாஷ் சிங், தேஷ் பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டும், மொயீன் அலி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. போட்டியின் இறுதியில் திவன் கன்வே அரை சதம் எடுத்தார்.

எம்.எஸ்.தோனி 32 ரன்களும், ரகானே 31 ரன்களும், ஷிவம் துபே மற்றும் ருத்துராஜ் தலா 8 ரன்களும், அலி 7 ரன்களும், ஜடேஜா 25 ரன்களும், ராயுடு ஒரு ரன்னும் எடுத்தனர்.

இறுதியில் சிஎஸ்கே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Comments (0)
Add Comment