நல்ல மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்!

“மனம் லேசாக மிதந்தது. கிளுகிளுவென்று ஒரு மகிழ்ச்சி.
எழுந்து விளக்கைப் போட்டு அலமாரியைத் திறந்து மிச்சமிருந்த இரண்டு மைசூர் பாகையும், கதம்ப பஜ்ஜியையும் தின்றாள். பசி தான்.

இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்த பிறகு வயிறு இரைந்தது. இரண்டு வெற்றிலையைப் போட்டுக் கடைவாயில் அரைத்தாள். படுத்துக் கொண்டாள். நாதபிந்துகலாதி.

நிம்மதி. மகிழ்ச்சி. மனிதர்களில் நல்லவர்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள். பிசிநாரிகள் பத்து இருக்கும். பரந்த மனம் ஒன்றும் இந்த மாதிரி எப்போதாவது இருக்கத் தான் இருக்கிறது. தூக்கம் வருகிறது.

ஐந்துமணி. பால்காரன். பிறகு அரைமணிக்கெல்லாம் கூட்டுகிற பெண் பிள்ளை. அவள் வெந்நீர் போட்டுத் தயார் செய்து மூன்றாவது தூக்கத்தில் எழுப்பினாள்.

மணி ஆறு முப்பத்தைந்து. காப்பி போட்டு, பல் தேய்த்து, காப்பியைக் குடித்து, குளித்து, ஆடை உடுத்தி, தலை வாரும்போது, வாசலில் கார் நிற்கும் ஓசை கேட்டது.
யார் இறங்கி வருகிறது? பவானியா?’’

– ‘மணம்’ சிறுகதையில் தி.ஜானகிராமன்

Comments (0)
Add Comment