1957 ஆம் ஆண்டு.
மாஸ்கோவில் நடந்த உலக இளைஞர் விழாவில் கலந்து கொண்டு நாட்டியமாடினார்கள் தமிழகத் திரைப்படக் கலைஞர்களான பத்மினியும், ராகினியும்.
அவர்களுக்கு முதல் பரிசு கிடைத்தது. பெருமிதம் பொங்க தமிழகத்திற்குத் திரும்பியபோது அவர்களுக்குப் பாராட்டு விழாவை நடத்தியது தென்னிந்திய நடிகர் சங்கம்.
சி.சுப்பிரமணியம், எஸ்.எஸ்.வாசன், கே.சுப்பிரமணியம், மு.வரதராசன், டி.கே.சண்முகம் போன்றோர் பேசிய பிறகு பேசியவர் எம்.ஜி.ஆர்.
அப்போது சில பத்திரிகைகளில் பத்மினி சகோதரிகளுக்குக் கிடைத்த பெருமை தமிழகத்திற்கா, கேரளத்திற்காக என்று விவாதங்களை நடத்தியபோது, “கலைஞர்களைப் பற்றி இப்படிப்பட்ட கருத்துக்களைப் பரப்புவது அடியோடு தவிர்க்கப்பட வேண்டும்” என்று கண்டித்துப் பேசியவர் எம்.ஜி.ஆர்.
நாட்டியப் பேரொளி பத்மினியின் பேச்சு ரத்தினச் சுருக்கம்.
“கேரளத் தாயால் ஈன்றெடுக்கப்பட்டு, தமிழ்த் தாயால் வளர்க்கப்பட்டு, கலைத் தாயினிடத்தில் ஒப்படைக்கப்பட்டவர்கள் நாங்கள் என்றே கூற விரும்புகிறேன்”
நன்றி: நடிகன் குரல், 1957 நவம்பர் மாத இதழ்.
#பத்மினி #நடிகர்_சங்கம் #நடிகன்_குரல் #மாஸ்கோ #உலக_இளைஞர்_விழா