மெஸ்ஸியை முந்திய ஷாருக்கான்!

உலகப் புகழ்பெற்ற ‘டைம்’ சஞ்சிகை, ஆண்டுதோறும் ரசிகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, செல்வாக்குமிக்க நூறு பேரின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அவ்வகையில், இவ்வாண்டு செல்வாக்குமிக்க மனிதர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் இந்தித் திரையுலகின் முன்னணி நட்சத்திரம் ஷாருக்கான்.

கால்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி, இங்கிலாந்து இளவரசர் ஹேரி-மேகன் மார்க்கில் தம்பதி, ‘மெட்டா’ நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் உள்ளிட்டோரைக் காட்டிலும் 57 வயது ஷாருக் அதிக வாக்குகளைப் பெற்றார்.

மொத்தம் 1.2 மில்லியன் வாக்குகள் பதிவான நிலையில், ஷாருக்கிற்கு அதில் நான்கு விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன.

அண்மையில் ஷாருக் நடிப்பில் வெளியான ‘பதான்’ உலகளவில் ரூ.1,000 கோடிக்குமேல் வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

அதிக சுதந்திரம் கேட்டுப் போராடிவரும் ஈரானியப் பெண்களுக்கு இரண்டாமிடம் கிடைத்தது.

1.9 விழுக்காடு வாக்குகளுடன், இங்கிலாந்து இளவரசர் ஹேரியும் அவரின் மனைவி மேகனும் முறையே மூன்றாம், நான்காம் இடங்களில் வந்தனர். ஐந்தாமிடத்தில் வந்த மெஸ்ஸிக்கு 1.8 விழுக்காடு வாக்குகள் கிட்டின.

Comments (0)
Add Comment