கனடாவிலிருந்து மெக்சிகோ வரை, கிட்டத்தட்ட வட அமெரிக்க கண்டம் முழுவதும் காற்று மாசு அளவை மிகத் துல்லியமாக கணக்கிடக்கூடிய கருவியை பால் ஏரோஸ்பேஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது.
மணிக்கொரு முறை என்ற அடிப்படையில், காற்று மாசை கணக்கிடும் இந்த கருவிக்கு டெம்போ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஒரு டிஷ் வாஷர் அளவிலே ஆன இந்த கருவி Intelsat 40E என்ற செயற்கைகோளில் பொருத்தப்பட்டு ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. அமெரிக்காவின் நாசா நிறுவனமும், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து இந்தக் கருவியை விண்ணில் ஏவியுள்ளன.