உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் வீராங்கனைகள்!

இந்திய வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு 12 வது இடம்

உலக அளவில் அதிக சம்பளம் பெறும் வீராங்கனைகளின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில், ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற, இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு 12-வது இடம் கிடைத்துள்ளது.

இந்தப் பட்டியலில், ஜப்பான் நாட்டு டென்னிஸ் வீராங்கனையான நவோமி ஒசாகா முதல் இடம் பிடித்துள்ளார்.

அவரது மொத்த வருவாய் ரூ.420 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. 2வது இடத்தில், அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் உள்ளார். அவரது வருவாய் ரூ.339 கோடியாக உள்ளது.

பனிச்சறுக்கு விளையாட்டுகளில் ஒன்றான பிரீஸ்டைல் ஸ்கையர் பிரிவில் விளையாடி வரும் அமெரிக்க  வீராங்கனை எய்லீன் கூ 3-வது இடம் பிடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் 12-வது இடம் பிடித்துள்ள பி.வி.சிந்துவின் மொத்த வருவாய் கடந்த ஆண்டு ரூ.58 கோடியாக இருந்தது.

அவற்றில், களத்தில் விளையாடி கிடைத்த தொகை ரூ.82 லட்சம் என்றும் களத்தில் அல்லாமல் வெளியிலிருந்து கிடைத்த தொகையானது ரூ.57.5 கோடி என்றும் கூறப்படுகிறது.

Comments (0)
Add Comment