கீழடியில் நாளை தொடங்குகிறது 9ம் கட்ட அகழாய்வுப் பணிகள்!

கீழடியில் வரும் எப்ரல் 6ம் தேதி முதல் 9ம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறை தொடங்கவுள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகாவில் உள்ள கீழடியில் 110 ஏக்கர் பரப்பளவில் உள்ள தொல்லியல் மேட்டில் 2014ஆம் ஆண்டு முதல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதல் 3 கட்ட அகழாய்வுகளை ஒன்றிய தொல்லியல் துறையும், அடுத்த 5 கட்ட அகழாய்வு பணிகளை தமிழக தொல்லியல் துறையும் நடத்தியுள்ளது.

இந்நிலையில், கீழடியில் 9 ஆம் கட்ட அகழாய்வு பணிகள் எப்ரல் 6 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.

அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய 3 இடங்களில் 9ம் கட்ட அகழாய்வு செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது. 

கீழடியுடன் கங்கைகொண்ட சோழபுரம், பட்டறைப் பெரும்புதுார், வெம்பக் கோட்டை, துலுக்கர்பட்டி, கீழ்நமண்டி, பூதிநத்தம், பொற்பனைக் கோட்டை ஆகிய இடங்களிலும் அகழாய்வுப் பணிகள் தொடங்க உள்ளது.

Comments (0)
Add Comment