நாடகம் – மீட்டெடுக்க வேண்டிய கலை!

சினிமாவின் படையெடுப்புக்கு முன்பு, தமிழர்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்திருந்தது நாடகம் மட்டுமே.

சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில், நாடகத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.

நாடக கலைஞர்கள் வந்து தங்கி வாரகணக்கில் நாடகம் நிகழ்த்திய சம்பவங்களும் இங்கு உண்டு.

நாடக தினம் வரலாறு!

சர்வதேச அரங்கப் பயிலகம் (International Theater Institute) என்ற அமைப்பு யுனெஸ்கோவுடன் இணைந்து, உலகெங்கிலும் உள்ள முன்னணி நாடக, நாட்டிய வல்லுனர்களால், நிகழ்கலைத் துறைகளில் ஈடுபடுவோரின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் முக்கிய நோக்கோடு, 1948-ஆம் ஆண்டு பாரீசில் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் அடுத்த கட்டச் செயல்பாடாக, 1961-இல் ஃபின்லாந்தின் தேசிய அரங்கவியல் தலைவரும், ஃபின்னிஷ் மொழியின் முன்னணி நாடகாசிரியருமான கார்லோ ஆர்வி கிரிமா என்பவர் உலக அரங்க தினம் ஒன்றை ஏற்படுத்தி, அந்த நாளில் உலகெங்கும் உள்ள ITI-மையங்களில் நாடகம், நாட்டியம் போன்ற அரங்கவியல் நிகழ்வுகளை நிகழ்த்திக் கொண்டாடும் யோசனையை முன்வைத்தார்.

தியேட்டர் ஆஃப் நேஷன்ஸ்!

1962-ஆம் வருஷம் மார்ச்-27 ஆம் நாள் பாரீசில் துவங்கிய ‘தியேட்டர் ஆஃப் நேஷன்ஸ்’ திருவிழாவை நினைவு கூறும் வகையில் அந்த தினத்தையே ஒவ்வொரு வருஷமும் உலக அரங்க தினமாகக் கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

இயல் இசை நாடகம்!

இதை ஒட்டி, அந்த நாளில் வெவ்வேறு உலக நாடுகளில் உள்ள ஐ.டி.ஐ. மையங்களில் நாடகம், நாட்டியம், இசை-நாடகம், மற்றும் அந்தந்தப் பிரதேசத்தின் கிராமீய நிகழ்கலைகள் முதலியவை விமரிசையாக நிகழ்த்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது..

புதுமையை புகுத்திய பம்மல் சம்பந்த முதலியார்!

தமிழகத்தில், 1940 வரை புராணம், சமசுகிருதக் காவியங்கள், சமுதாயச் சிந்தனை நாட்டுப்பற்று போன்ற வையே நாடகங்களில் இருந்தன.

பின்னர் சுதந்திர வேட்கையை உணர்த்தும் விதமான நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன.

தமிழ் நாடக மேடைகளில் சீர்திருத்த நாடகங்களை அறிமுகம் செய்தவர் பம்மல் சம்பந்த முதலியார்.

Comments (0)
Add Comment