வன விலங்குகள் பலியாவதைத் தடுக்க என்ன வழி?

– சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

மின் வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வனவிலங்குகள் பாதுகாப்பு தொடர்பான சிறப்பு வழக்குகளை விசாரிக்கும் அமர்வில் முறையிடப்பட்டது.

நீதிபதிகள் சதீஸ்குமார் மற்றும் பாரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் யானைகள் ஆர்வலர் முரளிதரன், சொக்கலிங்கம் ஆகியோர் முறையீடு செய்தனர்.

மின்வேலிகள் அமைக்க விதிமுறைகள் வகுக்க வேண்டும் என்று பலமுறை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியும் இதுவரை அமல்படுத்தவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 யானைகள் மின்வேலியில் சிக்கி இறந்துள்ளது என்றும் யானைகள் உயிரிழப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் இதனை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதோடு, மின்வேலியில் சிக்கி வன விலங்குகள் பலியாவதை தடுப்பதற்கு இதுவரை ஏன் உரிய விதிமுறைகளை அமல்படுத்தவில்லை என்றும் கேள்வியெழுப்பினார்.

மனுதாரர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ”இது தொடர்பாக முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், தமிழ்நாடு மின்னுற்பத்தி பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Comments (0)
Add Comment