புதிய உயரம் தொடும் ஐஸ்வர்யா மேனன்!

‘தமிழ் படம் 2’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

இப்படத்தைத் தொடர்ந்து ‘நான் சிரித்தால்’, ‘வேழம்’, ‘தமிழ் ராக்கர்ஸ்’ என தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் தயாராகும் திரைப்படத்திலும் நடித்துவரும் இவர், தற்போது தெலுங்கில் பான் இந்திய திரைப்படங்களாக மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் ‘ஸ்பை’ படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கடந்தாண்டில் தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற படம் ‘கார்த்திகேயா 2’ .

இப்படத்தின் நாயகனான நிகில் சித்தார்த், கதையின் நாயகனாக நடித்து வரும் ‘ஸ்பை’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா மேனன் நடித்து வருகிறார்.

பான் இந்திய படைப்பாக தயாராகி வருவதால் இந்த படம் தமிழிலும் வெளியாகும்.

அடுத்து, தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்திகேயா நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாதப் படத்தில் அவருக்கு ஜோடியாகவும் ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார்.

சமூக வலைதள பக்கத்தில் தீவிரமாக இயங்கிவரும் ஐஸ்வர்யா, தற்போது முன்னணி நட்சத்திர கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்டமான பட்ஜெட் திரைப்படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதால், ஓய்வின்றி பரபரப்பாகியுள்ளார்.

Comments (0)
Add Comment