– சூரத் நீதிமன்றம் தீர்ப்பு
பிரதமர் மோடி பெயர் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது கர்நாடக மாநிலம், கோலாரின் நடந்த பேரணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார்.
அதில் மோடி என்ற பெயர் உள்ளவர்கள் எல்லாம் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள் என ராகுல் காந்தி பேசினார்.
தேர்தல் பிரச்சாரத்தில் மோடி என்ற குடும்ப பெயரை மையப்படுத்தி ராகுல் அவதூறாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பாஜக எம்எல்ஏ மற்றும் குஜராத் முன்னாள் அமைச்சர் புர்னேஷ் மோடி ராகுலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் சூரத் நீதிமன்ற தலைமை நீதிபதி வர்மா முன்னிலையில் இருதரப்பின் இறுதி வாதங்கள் கடந்த வெள்ளியன்று முடிந்தது. இதனை தொடர்ந்து வழக்கின் தீர்ப்பு இன்று ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று ஆஜரானார்.
மேற்கண்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்றம், மோடி என்ற பெயர் பற்றி அவதூறாக பேசியராகுல் காந்தி குற்றவாளி என அறிவித்தது.
மேலும் ராகுல் காந்தி 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது. அத்துடன் 30 நாட்களில் மேல்முறையீடு செய்ய ராகுல் காந்தி சூரத் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
மேல்முறையீடு செய்ய வசதியாக ராகுல் காந்திக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்.
ரூ. 15,000 பிணைத்தொகை செலுத்தி ராகுல் காந்தி ஜாமீன் பெற நீதிமன்றம் உத்தரவிட்டது.
2019ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பின் சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
உண்மையே கடவுள் என்ற காந்தியின் கூற்றை சுட்டிக்காட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவதூறு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ‘உண்மையே கடவுள்’ என டிவிட்டரில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.