அதிதி ஷங்கரின் அடுத்த படம்!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர், ஒரு வளர்ந்துவரும் நடிகை. விருமன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்துவருகிறது.

இதற்கிடையே, மாவீரன் படத்தைத் தொடர்ந்து அதிதி ஷங்கர் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

அடுத்ததாக விஷ்ணு வர்தன் இயக்கத்தில் தான் அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளாராம்.

இப்படத்தில் ஹீரோவாக நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் நடிக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தை ஆகாஷின் மாமனார் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறாராம்.

சேவியர் பிரிட்டோ தளபதி விஜய்யின் நெருங்கிய உறவினர். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

Comments (0)
Add Comment