தயாரிப்பாளர்கள் சம்பாதிக்க வழிகாட்டும் நிறுவனம்!

பிராண்ட் எக்ஸ்சேஞ்சின் புதிய முன்முயற்சி, திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் ஆடைகளுக்கான‌ செலவைக் குறைப்பதோடு தயாரிப்பாளர்கள், ஆடை நிறுவனங்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு வருவாய் பெற்றுத்தரும்.

பிராண்ட் எக்ஸ்சேஞ்ச் (www.brandxchange.media) சென்னை ஜிஆர்டி கிராண்டில் நடத்திய ஊடக தொழில்நுட்ப மாநாட்டில் தென்னிந்தியத் திரையுலகைச் சேர்ந்த முன்னணி தயாரிப்பாளர்கள் பங்கேற்றனர்.

தொழில்நுட்பம், வருவாய் மேம்பாடு மற்றும் புதுமையான தொழில்முனைவு ஆகியவை திரைப்படத் துறையை எவ்வாறு மாற்றி அமைக்கின்றன‌ என்பதை ஆலோசிக்கும் நிகழ்வின் ஒரு பகுதியாக ‘எதிர்கால மீடியா தொழில்நுட்பம்’ என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.

வணிகத் திட்டமிடல் மற்றும் வருவாய் அடையாளப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் பல சாதனைகள் படைத்து இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவமுள்ள நிபுணரான சிவகுமார் ஆர், பிராண்ட் எக்ஸ்சேஞ்ச் தளத்தின் நிறுவனர்.

திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் ஆடைகளில் இருந்து வருவாயை ஈட்டுவதற்கு முன்னணி ஆடை நிறுவனங்களுடன் தயாரிப்பாளர்களை இணைப்பதை இத்தளம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஒரு படத்தின் பட்ஜெட்டில் கணிசமான தொகை ஆடைகளுக்காக செலவிடப்படுகிறது. மொத்த பட்ஜெட்டில் அதிகபட்சமாக சுமார் 10 சதவீதம் வரை நடிகர்களின் ஆடைகளுக்கு செலவிடப்படுவதாக கூறப்படுகிறது.

தொழில்நுட்பத்தின் உதவியுடன் இதை மாற்றி அமைத்து வருவாயை உருவாக்குவதை பிராண்ட் எக்ஸ்சேஞ்ச் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த முன்னெடுப்பின் மூலம் ஒரு திரைப்படத்தில் முக்கிய நட்சத்திரங்கள் பயன்படுத்தும் ஆடைகளின் உரிமை முன்னணி பிராண்டுகளுக்குத் தரப்படும்.

ஒரு குறிப்பிட்ட திரைப்படத்தில் நடிகர்கள் பயன்படுத்தும் ஆடைகள் இந்த நிறுவனங்கள் மூலம் மக்கள் வாங்கலாம்.

இந்த ஆடைகளுக்கு பிராண்டுகள் ஒதுக்கும் மதிப்பீட்டு தொகை தயாரிப்பாளர்களுக்கு வருமானத்தை உருவாக்கும்.

“பிராண்ட் எக்ஸ்சேஞ்ச் தளத்தின் முக்கிய வேலை தயாரிப்பாளர்களுடன் முன்னணி ஆடை பிராண்டுகளை இணைப்பதாகும்.

தயாரிப்பாளர்கள், ஆடை நிறுவனங்கள் மற்றும் ஆடை வடிவமைப்பாளர்கள் இந்த முயற்சியின் மூலம் பயனடைவார்கள்.

ஒரு படத்தில் வரும் நடிகர்களின் ஆடைகளுக்கு முன்னணி பிராண்ட்கள் நிதி வழங்கும். இதனால் தயாரிப்பாளருக்கு வருவாய் கிடைக்கும். ஒரு காலத்தில் செலவாகக் காணப்பட்ட ஆடைகள் இதன் மூலம் வருமானம் ஈட்டும் வழியாக மாறும்” என்றார் சிவகுமார்.

Comments (0)
Add Comment