தேயாத அன்பு தேவை…!

மரத்தின் ஒரு கிளையை மட்டுமல்ல
முழு விருட்சத்தையும் நேசி;

அப்போது உன் அன்பில்
கிளையும் அதிலுள்ள
இலையும் சருகும்
மொக்கும் மலரும்
உதிர்கிற இதழும்
உயரமும் தரையிலே
வீழும் நிழலும்
யாவுமே சிக்கும்;

வாழ்வை ஒருமிக்க நேசி
அந்த அன்பு
தேயாது…!

– ஜே.கிருஷ்ணமூர்த்தி

Comments (0)
Add Comment